ஊட்டியில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED :3120 days ago
ஊட்டி: ஊட்டியில் நடந்த ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி விழா ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமா வது ஜெயந்தி விழா, ஸ்ரீனிவாசப் பெருமாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, ரத யாத்திரை ஊர்வலத்தை, ஸ்ரீ கணேஷ் ஸ்வரூபானந்தகிரி சுவாமிகள் துவக்கி வைத்தார். கோவிலிலிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் பஜனை, ஆடல் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியுடன் சென்றது. தொடர்ந்து நடந்த உள்ளரங்க நிகழ்ச்சியில், ராகவேஷானந்த சுவாமிகள் ஆன்மிக உரையாற்றினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.