வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் உலா
ADDED :3129 days ago
திண்டுக்கல்: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் திண்டுக்கல் நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி கடந்த ஏப்.11ல் முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கி எதிர்சேவை செய்தார். திண்டுக்கல் நகரில் என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைச்சாமிபுரம், நாகல்நகர்பகுதிகளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நாகல் புதுாரில் பலிஜவாரு பொது மகாஜன உறுப்பினர்களால் அவதார மண்டகப்படி நடந்தது. இதில் சேஷ வாகனத்திலும் அருள்பாலித்தார். டாக்டர் ராகவன், வழக்கறிஞர் ராம்பாலாஜி, சம்பத்குமார், சிவக்குமார், ராஜ்குமார், சேஷாத்திரி, சவுந்தரராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.