நல்லாத்தூரில் தேர் திருவிழா
ADDED :3222 days ago
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்தூரில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி, நடந்த திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., பிரபு, துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் டி.எஸ்.பி., சுருளிராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.