பால்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED :3131 days ago
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 8:30 மணிக்குமேல், அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி மற்றும் சக்தி கரகத்துடன், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், கடைவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வழியாக, கோவிலை வந்தடைந்தனர். இன்று அதிகாலை, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம் சாத்துதல் உற்சவம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, சுவாமி ரதம் ஏறுதல், 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.