உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு செல்ல சாலை வசதியின்றி அவதி

கோவிலுக்கு செல்ல சாலை வசதியின்றி அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் பிரிவு சாலையில் இருந்து, பொன்மலை கோவிலுக்கு இரண்டு கிலோ மீட்டர் தூர தார்ச்சாலை உள்ளது. கிருஷ்ணகிரி நகரில் இருந்தும், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்தும், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும், பொன்மலை கோவிலுக்கும் வாகனங்களில் செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், கோவில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேதமான சாலையை சரி செய்து போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !