உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா நாளை துவக்கம்

கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா நாளை துவக்கம்

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று சாட்டுதல் செய்து நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 21  நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும்  ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி அம்மனை வீதி உலா அழைத்து வருவர்.  மே 3 இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 5 ல் அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி  எடுத்தல், ஆயிரம் கண்பானை எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை  கிராமகமிட்டியினர் செய்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !