கீரணிப்பட்டி கோயில் தேரோட்டம்
ADDED :3133 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மகோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏப்.,9ல் காப்புக்கட்டி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவுடன் விழா துவங்கியது. தினசரி இரவில் ரிஷபம், அன்னம், சிம்மம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. ஏப்.,13ல் பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. ஏழாம் திருநாளில் புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வந்தார். 9ம் திருநாளாக தேரோட்டம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு தேர்வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. இன்று மாலை உற்சவ அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி இளையாத்தங்குடிக்கு திரும்புதலுடன் மகோற்ஸவம் நிறைவடைகிறது.