உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 100 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சுவாமி சிலை திருட்டு

100 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சுவாமி சிலை திருட்டு

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே,  உத்திராபதீஸ்வரர் கோவிலில், 100 ஆண்டுகள் பழமையான, ஐம்பொன் சுவாமி சிலையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடலுார் மாவட்டம், குமராட்சி அடுத்த கீழ பருத்திக்குடி கிராமத்தில், மிகப் பழமையான உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 100 ஆண்டுகள் பழமையான, ஐம்பொன்னாலான சுவாமி சிலையை பக்தர்கள் வணங்கி வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம் போல் குருக்கள், பூஜையை முடித்து, கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை கோவில் பூட்டு உடைத்து, சுவாமி சிலை திருடப்பட்டிருப்பதைப் பார்த்த பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருடு போன சுவாமி சிலை, 2 அடி உயரம், 5 கிலோ எடையிலான ஐம்பொன் சிலையாகும். போலீசார் வழக்குப் பதிந்து, சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !