உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: அம்மன் ஊர்வலம்

கூடலுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: அம்மன் ஊர்வலம்

கூடலுார் : மேல்கூடலுார், சந்தக்கடை மாரியம்மன் கோவில், தேர் திருவிழா, கடந்த, 7ல், காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 16ம் தேதி வரை, சிறப்பு பூஜைகளும், மாலை, 6:30 மணிக்கு கும்ப ஊர்வலமும் நடந்தது. நேற்று, முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அலகரிக்கப்பட்ட தேரில், அம்மன் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், கூடலுார் நகர் வழியாக கூடலுார் சக்தி விநாயகர், மைசூர் சாலையில் உள்ள முன்னீஸ்வரன் எஸ்.எஸ்.நகர் அருள்மிகு சத்தியநாகாஜன் கோவிலை சென்றதடைந்தது. நேற்று, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று, காலை முதல் சிறப்பு பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வழியனுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !