உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி: கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி: கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகம் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை 18முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம். சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக, காலை 6மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 64வகையான அபிஷேகங்கள், 1008 அர்ச்சனை, 28ஆகம பூஜைகள் நடந்தது. பின், மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். பகல் 12:00 மணிக்கு, உற்சவ காலைபைரவர், கோவிலை மூன்று முறை சுற்றி, தேரில் வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !