உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தந்தி மாரியம்மன் கோவில் பரிவேட்டை மாவிளக்கு ஊர்வலம் அமர்க்களம்

தந்தி மாரியம்மன் கோவில் பரிவேட்டை மாவிளக்கு ஊர்வலம் அமர்க்களம்

குன்னுார் : குன்னுார் தந்திமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தின் ஒருபகுதியாக, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 7ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நேற்று, மாலை, 5:00 மணிக்கு தையல் தொழிலாளர்கள் சார்பில், 91வது ஆண்டு பரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அம்மன் குதிரை வாகனத்தில் நகர்வலம் வந்தார். முன்னதாக, நீலகிரி மாவட்ட தெலுங்கு ஜங்கமர் சங்கத்தினரின் சார்பில், அபிஷகே ஆராதனை, மாவிளக்கு ஊர்வலம், தேவாங்கர் சவுடேஸ்வரி மன்றத்தினரின் அபிேஷக ஆராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !