மழை வேண்டி பூஜாரிகள் சிறப்பு பிரார்த்தனை
ADDED :3131 days ago
திண்டுக்கல்: மழை வேண்டி பூஜாரிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிளிப்பட்டியில் ஆதிசுயம்பு ஈஸ்வர், அபிராமிஆலயத்தில் பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் உதயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர்.