கும்பாபிஷேக பூர்த்தி விழா: சிவன் கோவிலில் மகா யாகம்
ADDED :3131 days ago
ஊட்டி : ஊட்டி காந்தள் காசிவிஸ்வநாதர் கோவிலில், மகாகும்பாபிஷேக பூர்த்தி விழா மற்றும் ஐயன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி காந்தள் விசாலாட்சியம்பாள் உடனமர் காசிவிஸ்வநாதர், பாலதண்டாயுதபாணி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு பூர்த்தி விழாவும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசஸ்தாபனம், மகாயாகம், பூர்ணாகுதி மற்றும் அபிஷேகம், மகா தீபாராதனை, பகல், 12:30 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தட்சிணாமூர்த்தி மடாலயம் அறங்காவலர் குழு, காசிவிஸ்வநாத சுவாமி ஆல சேவா சங்கம், முன்னேற்ற சங்கம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.