உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாபாரத திருவிழாவில் துரியோதனன் படுகளம்

மகாபாரத திருவிழாவில் துரியோதனன் படுகளம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தர்மராஜா கோவிலில், மாகாபாரத திருவிழாவை முன்னிட்டு, நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி பழைய பேட்டை தர்மராஜா கோவிலில், மகாபாரத விழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த மகாபாரத நிகழ்ச்சியையொட்டி, தினமும் பகல், 12:00 மணிக்கு, புலவர் செல்வ கருணாநிதியின் சொற்பொழிவும், கலாவதியின் கவிவாசிப்பு நிகழ்ச்சியும் நடந்து வந்தது. தினமும் இரவில், செல்வ விநாயகர் நாடக சபாவின் சார்பில், மகாபாரத நாடகம் விடிய விடிய நடந்தது. இந்த நிகழ்ச்சியின், 19வது நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை, ஏழுரை சேர்ந்த ஊர்க்கவுண்டர்கள் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !