வில்லியனுார் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3125 days ago
வில்லியனுார்: ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. வில்லியனுார் ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகரில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவிலில், ௧௨ம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம், கடந்த ௧௦ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் விழாவில், காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா, கடந்த ௧௮ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று காலை ௧௦௮ சங்காபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆச்சார்யாபுரம், மூகாம்பிகை நகர் வாசிகள் செய்துள்ளனர்.