பகவதி அம்மன் கோவிலில் மழை வேண்டி யாக பூஜை
ADDED :3429 days ago
ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் யாக பூஜை கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பூஜையும், கூட்டுப் பிராத்தனையும் நடந்தது. இதில், சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இதில் பங்கேற்றனர். பின்னர் அம்மனை தரிசனம் செய்து அருள்பெற்றனர். ஏற்பாடுகளை சஷ்டி கட்டளைக்குழுவினர் செய்திருந்தனர்.