காளஹஸ்தி கோவில் வசூல் ரூ.87 லட்சம்
ADDED :3191 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், கடந்த, 22 நாட்களில், பக்தர்கள், 87.33 லட்சம் ரூபாய் ரொக்கம், 390 கிலோ வெள்ளி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த, 22 நாட்களில், பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, கோவில் அதிகாரி பிரம்மரம்பா முன்னிலையில் கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 87 லட்சத்து, 33 ஆயிரத்து, 772 ரூபாய் ரொக்கம், 390 கிலோ வெள்ளி மற்றும் 38 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன.