உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாச்சியம்மன் திருக்கல்யாண உற்சவம்

பொன்னாச்சியம்மன் திருக்கல்யாண உற்சவம்

பொங்கலூர்: பொங்கலூர் ராமம்பாளையம் பொன்னாச்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, 17ம் தேதி, மகா கணபதி
ஹோமம், காப்பணிவித்தல், கொடியேற்றம், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், குண்டம் பூ இடும் பூஜை; 18ம் தேதி பூக்குண்டம் மிதித்தல், மகா அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு அம்மன் அழைத்தல், இரவு, 11:00 மணிக்கு கும்பம் முத்தரித்தல் ஆகியன நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு பொன்னாச்சி அம்மன் திருக்கல்யாணம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !