ஏப்.24ல் லட்சுமி வராஹ பெருமாள் ஜெயந்தி
ADDED :3125 days ago
மதுரை: மதுரை மேலூர் ரோடு அயிலாங்குடி ஸ்ரீ லட்சுமி வராஹப் பெருமாள் கோயிலில், ஏப்., 24 காலை 7:15 மணிக்கு வராஹ அவதார ஜெயந்தி மகோத்ஸவம் மற்றும் வராஹ ஹோம
ஸ்நபன திருமஞ்சன அலங்கார சாற்றுமுறை தீர்த்த கோஷ்டியுடன் நடக்கிறது. வேத திவ்யபிரபந்த பாராயணம், அலங்கார தீபாராதனை, திருமஞ்சனம் செய்யப்பட்டு, பிரசாதம்
வழங்கப்படுகிறது. மதியம் 12:15 மணிக்கு வராஹ வைபவம் தலைப்பில் பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.