உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை நடக்கும்  தேரோட்டத்தின் போது, ரங்கநாதர் அணிந்து கொள்ளும்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, வஸ்திரம்
நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் கோயில்
வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள் எழுந்தருளினார்.  அங்கு மாலை, கிளி, வஸ்திரங்கள் அணிவித்து, சிறப்பு பூஜைகளை  கோவிந்தராஜ் பட்டர் செய்தார். பின் அவைகள் மாடவீதிகள்  வழியாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டு, ஸ்தானிகம்  ரமேஷ் தலைமையில் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான் அனந்தராமன் பட்டர், மணியம் ஸ்ரீராம் மற்றும் பக்தர்கள்
கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !