பாரதீ தீர்த்த சுவாமிகள் பழநியில் சிறப்பு பூஜை
ADDED :3107 days ago
பழநி : சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி, பழநி மலை கோவிலில், சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இருவருக்கும் கோவில் சார்பில், பூர்ண கும்ப வரவேற்பு, தூளிபாத பூஜை நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா வரவேற்றனர். ஆனந்த விநாயகருக்கு, வெள்ளிக்கவசம் சார்த்தி வழிபட்டனர்.
காலை, 9:00 மணி காலசந்தி பூஜையில், மூலவருக்கு சிறப்பு பூஜை செய்தனர். பாரதீ தீர்த்த சுவாமி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.