பொள்ளாச்சியில் வருண ஜெப யாக பூஜை
ADDED :3187 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வருண ஜெப யாக பூஜை நேற்று நடந்தது. கடும் வறட்சி நிலவும் சூழலால், ஆங்காங்கே கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். இதனையடுத்து, பொதுமக்கள் கோவில்களில், வருணபகவானிடம் மழை வேண்டி
பூஜைகள், வழிபாடு நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் வருண ஜெபயாகம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சுப்ரமணிய சுவாமி கோவிலில், வருண ஜெப யாகம் நேற்று நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணி முதல் சிவாச்சாரியார்கள், பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் நின்று
ஒரு லட்சம் வருண மூலமந்திர ஜபம் செய்தனர். பின், ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.