உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ணபிரேமி உபன்யாசம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர மகோத்சவத்தை முன்னிட்டு உபன்யாசம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்ஸீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா 22ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 7:30 மணிக்கு
ராமானுஜர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வீதி புறப்பாடு நடந்தது.
சுவாமி கோவிலை அடைந்தவுடன்ஸீ வேணு கோபாலன் சன்னதி‚ தாயார் சன்னதி‚ பெரு மாள் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதிகளில் மங்களாசாசனம் நடந்தது. தொடர்ந்து ராமா னுஜருக்கு திருமஞ்சனம்ஸீ திருப்பாவை‚ சேவை சாற்றுமறை நடந்தது. மாலை 5:30 மணிக்கு பெருமாள் சன்னிதியில் திருவாராதனம்ஸீ 6:30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் ராமானுஜரின் பெருமைகள் பற்றி உபன்யாசம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் நன்றி கூறினார்.