உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியமங்கலம் ஐயப்பனுக்கு சடாகார பூஜை

சத்தியமங்கலம் ஐயப்பனுக்கு சடாகார பூஜை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தபால் நிலைய சாலையில்,  வேட்டுவ தெருவில் புதிதாக ஐயப்பன் கோவில் கட்டப்படுகிறது. ஐயப்பன் சிலைக்கு சக்தி கொடுக்கும், சடாகார பூஜை நேற்று
காலை தொடங்கியது. இதற்காக ஆறு அடி குழி தோண்டப்பட்டது. அதில்மரத்தால் செய்யப்பட்ட கும்பம், ஆமை, தாமரை ஆகிய பொருள் புதைக்கப்பட்டன. பிறகு குழியின் மேற்பரப்பில் காப்பர்
இரும்பு கம்பி வைத்து, அதன் மீது சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இப்படி சடங்கு நடத்தினால், ஐயப்பனுக்கு சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் மக்கள்
கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !