உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம், சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சேலம், சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சேலம்:  சேலம், அம்மாபேட்டை, சவுந்திரவல்லி சமேத சவுந்திரராஜ  பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்வ விழா நடக்கிறது. இந்தாண்டு பிரம்மோற்வச விழா இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  இரவு பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். பிரம்மோற்சவ விழாவையொட்டி, பத்து நாட்களும், காலை, இரவு இரு வேளைகளிலும் சுவாமி விதவிதமான  வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு  சேவை ஸாதிக்க உள்ளார். மே, 2ல், பிரம்மோற்ச விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. அன்று  மாலை தீர்த்தவாரியுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மே,  3ல் உலக நன்மைக்காக மஹா சுதர்சன யாகமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !