ஆதிபராசக்தி மன்றம் பால்குட அபிஷேகம்
ADDED :3102 days ago
மோகனூர்: கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில், மாரியம்மன் சுவாமிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மோகனூர் மாரியம்மன் கோவில்
திருவிழாவை முன்னிட்டு, நேற்று, இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் சார்பில், பால்குட அபிஷேக விழா சிறப்பாக நடந்தது. முன்னதாக, காலை, 8:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, 108 பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, மாரியம்மன் சுவாமிக்கு, பால்குட அபிஷேகம் நடந்தது.
அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.