உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் சித்திரை திருவிழா: ஆறு சுத்தம் செய்யும் பணி தீவிரம்

மானாமதுரையில் சித்திரை திருவிழா: ஆறு சுத்தம் செய்யும் பணி தீவிரம்

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் திருக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். வரும் 30ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வரும் 7ந்தேதி காலை 11:00 மணியில் இருந்து11:30 மணி வரைக்கும்,அடுத்த நாள்8ந்தேதி காலை 9:00மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாள்களின் போது அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.வரும் 9ந் இரவுதேதி வீர அழகர் பூப்பல்லக்கு நிகழ்ச்சி, 10ந்தேதி காலை வீரஅழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு தோறும் வைகை ஆற்றுக்குள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெறும். தற்போது வைகை ஆற்றுக்குள் மேம்பாலம் அருகிலிருந்து அழகர் கோவில் ஆற்று பகுதி வரை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆற்றுக்குள் வளர்ந்திருந்த சீமை கருவேலமரங்கள், நாணல்கள் செடி கொடிகள் என அனைத்தையும் பேரூராட்சியினர் பொது நிதியிலிருந்து மண் அள்ளும்இயந்திரம் சுத்தம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !