பரமக்குடியில் மே 7ல் மீனாட்சி திருக்கல்யாணம்
ADDED :3200 days ago
பரமக்குடி:பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத்திருவிழா ஏப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.காலை, மாலை கற்பகத்தரு,கிளி, பூத, சிங்க,
குதிரை, கைலாச, காமதேனு, ரிஷப, நந்திகேஸ்வரர், அன்ன வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கும். மே 6ல் இரவு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சியும், மே 7 ம் தேதி மாலை 6
மணிக்கு மேல் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.
அன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பபல்லக்கிலும் வீதிவலம் வருவர். மறுநாள் காலை 9:30 மணிக்கு தேரோட்டம், ஏப். 9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.