உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்ய சாய் சமிதி சார்பில் மாத்ரு பூஜை விழா

சத்ய சாய் சமிதி சார்பில் மாத்ரு பூஜை விழா

புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சத்ய சாய் சமிதி சார்பில், மாத்ரு பூஜை விழா நடந்தது. கடவுளை போல் பெற்றோர் மதிக்கப்பட வேண்டும். பெற்றோரின் அன்பு, தியாகம் மற்றும் ஆசீர்வாதம் இல்லாமல் ஆன்மிக பயிற்சிகள் பயனற்றது என்பதை வலியுறுத்தும் விதமாக,  சத்ய சாய் பாபா பால விகாஸ் மாணவர்கள் பெற்றோருக்கு மரியாதை செலுத்தும் மாத்ரு பூஜை  விழா, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் ஞான விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது. குறிஞ்சி நகர் சத்ய சாய் சமிதி சார்பில் விழா நடந்தது. பால விகாஸ் மாணவர்கள் பங்கேற்று,  பெற்றோர்களுக்கு மாத்ரு பூஜை நடத்தி, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். அதைத்தொடர்ந்து பஜனை நடந்தது. ஏற்பாடுகளை சத்ய சாய் குறிஞ்சி நகர் சமிதி உறுப்பினர்கள், குரு மற்றும் முன்னாள் பால விகாஸ் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !