சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
சேலம்: சேலம், சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்வச விழாவையொட்டி, நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. கொடி மரத்துக்கு கணபதி ஹோமம் செய்து காலை, 9:00 மணிக்கு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜர் சூரியபிரபை வாகனத்தில், சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். இரவு, 7:00 மணிக்கு பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் மே, 2ல், நடக்கிறது. அன்று மாலை தீர்த்த வாரியுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 3ல், உலக நன்மைக்காக சுதர்சன யாகம், மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 4 அன்று காலை, 81 கலச ஸ்தாபனமும், திருமஞ்சன நிகழ்ச்சியும் நடக்கிறது. மே, 5 அன்று மின்னொளியில் சப்தாவரணம் நடக்கிறது. 6 அன்று இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.