கொடுமுடியில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :3098 days ago
கொடுமுடி: கொடுமுடியில் மழை வேண்டி, வருண ஜெபம் நேற்று நடந்தது. கடும் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டியும், விவசாயத்தில் தமிழகம் செழிக்க வேண்டியும், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரிக்கரையில், நேற்று வருண ஜெபம் நடந்தது. பந்தல் அமைத்து, வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை ஜெபம் நடந்தது. புரோகிதர் சரவணசாமி தலைமை வகிததார். இதில் மக்களும் கலந்து கொண்டனர். ஜெபத்தின் இறுதியில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.