விழுப்புரம் அய்யப்பன் கோவில் சித்திரை திருவிழா
ADDED :3265 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் உள்ள வடசபரி அய்யப்பன் கோவிலில், சித்திரை விசு திருவிழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த 15ம் தேதி காலை, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் இருமுடி கட்டுதலும், மாலையில் வடசபரி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து வடசபரி அய்யப்பன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.