தடை நீங்கி முன்னேற்றம் தரும் நட்சத்திர அலங்கார விநாயகர்
ADDED :3123 days ago
நவக்கிரகங்களில் கேது மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் விநாயகரே அதிபதி. கோவை– பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரியில் அருள்பாலிக்கிறார். அசுவினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களிலும் அந்தந்த நாளுக்குரிய விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று விநாயகரை தரிசித்து, சிதறுகாய் உடைத்து வழிபட்டால் தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஜாதகரீதியாக கேது திசை, புத்தி நடப்பில் உள்ளவர்களும் இவரை வழிபட்டால் நன்மை ஏற்படும். இந்த நட்சத்திர அலங்காரம் இங்கு மட்டுமே உள்ளது சிறப்பாகும்.