பந்திக்கு முந்தலாமா?
ADDED :3123 days ago
பந்திக்கு முந்து; படைக்கு பிந்து என்பதை சாப்பாட்டு ராமன்கள் உருவாக்கிய பழமொழி என்று கேலி செய்வர். ஆனால், அதன் ஆன்மிக அடிப்படையை புரிந்து கொண்டால் உண்மை தெளிவாகும். விசேஷங்களில் அனைவரும் சேர்ந்து உண்பதை பந்தி என்று சொல்வர். வடமொழியில் உள்ள பங்க்தி என்ற சொல்லே தமிழில் பந்தி என்றானது. மனத்y´மை மிக்க ஒருவர் பந்தியில் சாப்பிட்டாலே, அங்குள்ள பரிமாறும் உணவு முழுவதும் புனிதம் அடையும். அப்படிப்பட்ட நல்லவரை பங்க்தி பாவனர் என குறிப்பிடுவர். சேர்ந்து சாப்பிடுபவர் நல்லவராக இருந்தால், அந்த நற்பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்பதால் பந்திக்கு முந்துவதில் தவறுண்டோ!