உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் சிருங்கேரி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

கோவையில் சிருங்கேரி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

கோவை: சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமிகள், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.  சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய, பாரதீ தீர்த்த மஹா சன்னிதான சுவாமிகள், விதுசேகர பாரதீ சன்னிதான சுவாமிகள் ஆகியோர் கோவையில் ஒன்பது நாட்களுக்கு விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளனர். ஏப்., 24 மாலை, சுவாமிகளுக்கு, பஞ்சவாத்தியங்கள் முழங்க, ரே  ஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று சாரதாம்பாள் கோவிலில், பதுாக்கா பூஜை, பிக்‌ஷா வந்தனம்  நடைபெற்றன. காலை 10:30 மணிக்கு, பக்தர்கள் சுவாமிகளுக்கு, மலர், மாலைகள், பழங்கள் ஆகியவற்றை சமர்பித்து பக்தர்கள்  ஆசிபெற்றனர். கோவில் வளாகத்தில், இரவு 8:30க்கு, சங்கராச்சார்யரின் சந்திர மவுலீஸ்வர பூஜைகள் நடைபெற்றன. மே.,2ம் தேதி வரை  காலை 10:30 மணிக்கு பக்தர்கள் ஆசி பெற அனுமதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !