உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்

திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்

திருத்தணி : திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. விழாவின், ஏழாம் நாளான, நேற்று, காலை, 10:00
மணிக்கு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைத்து, அர்ச்சகர் மந்திரங்கள் ஓத,திரவுபதி அம்மன் திருமணம் நடந்தது. மாலை உற்சவர் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !