உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் விழாவில் மின்தடை கூடாது; மின் வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

ராமானுஜர் விழாவில் மின்தடை கூடாது; மின் வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் ராமானுஜரின், ஆயிரமாவது அவதார விழாவில், நிகழ்ச்சியின் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட கூடாது என, மின் வாரிய
அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.கோடை வெயில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், ராமானுஜரின், ஆயிரமாவது அவதார திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில், அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டம், மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்றது.

அப்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவிலின் உள்ளே செல்லவும், வெளியே வரவும் உரிய தடுப்புகளை அமைக்க, மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறைவில்லாமல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய, அதிகாரிகளுக்கு அப்போது உத்தரவிட்டார்.முன்னேற்பாடு குறிப்பாக, விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

கலை பண்பாட்டுத் துறை நிகழ்ச்சிகள் விபரம்
ஏப்., 28    மாலை, 6:00 - 8:00 மணி வரை    சிறப்பு வில்லிசை
(ராமானுஜரின் வாழ்வும் வாக்கும்)
ஏப்., 28 இரவு, 8:00 - 9:30 மணி வரை பரதநாட்டியம்
ஏப்., 29 மாலை, 6:00 -  8:00 மணி வரை சிலம்பாட்டம்
ஏப்., 29 இரவு, 8:00 - 9:30 மணி வரை பக்தி பாமாலை
ஏப்., 30 மாலை, 6:00 - 8:00 மணி வரை பக்தி பாமாலை
ஏப்., 30 இரவு, 8:00 - 9:30 மணி வரைபுராண கட்டைக்கூத்து கலை
மே 1 மாலை, 6:00  - 8:00 மணி வரை தொன்மை ஆட்ட
வடிவங்கள் - சிறப்பு கலை நிகழ்ச்சி இரவு, 8:00 - 10:00 மணி வரை சிறப்பு பரதநாட்டியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !