உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெருமாள் கோயிலில் மே 1ல் சித்திரைத் திருவிழா மே 10ல் தேரோட்டம்

பழநி பெருமாள் கோயிலில் மே 1ல் சித்திரைத் திருவிழா மே 10ல் தேரோட்டம்

பழநி: பெருமாள் கோயிலில், சித்திரை திருவிழா மே 1ல்  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பழநி முருகன் கோயில் உபகோயிலான, லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில்
சித்திரை திருவிழா மே 1 முதல் 10வரை நடக்கிறது. முக்கிய  நிகழ்ச்சியாக மே7ல் திருக்கல்யாணமும், மே 9ல் திருத்தேரோட்டமும் நடைபெறும். விழாநாட்களில் சப்பரம், சிம்மம், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதிஉலா  வருவார். பக்திசொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.வெள்ளி தேரோட்டம்: மே 10ல் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில்
இருந்து 108 பால்குடங்கள் எடுத்து திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் வெள்ளி ரதத்தில் உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம்,  துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !