உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் திருவிழா பெண்கள் பால்குட ஊர்வலம்

கோத்தகிரி மாரியம்மன் திருவிழா பெண்கள் பால்குட ஊர்வலம்

கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழாவில்,  பால்குட ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கோத்தகிரி மார்க்கெட் பகுதி பெண்கள் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, பஸ் நிலையம் வழியாக, மாரியம்மன் கோவில்வரை பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு
அலங்கார அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. பகல், 1:00 மணிக்கு,  மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இவ்விழாவை ஒட்டி, இன்று (28ம் தேதி) காலை, 11:00 மணிக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு, பகல், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 3:00 மணிக்கு, கோத்தகிரி மகளிர் மன்றம் சார்பில், திருவிளக்கு பூஜையுடன், மாலை, 6:00 மணிக்கு, அக்கினி கம்பம் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !