மயிலம் முருகர் கோவிலில் சித்திரை கிருத்திகை விழா
ADDED :3119 days ago
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் சித்திரை கிருத்திகை விழா நடந்தது. மயிலத்திலுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.