பழநியில் கார்த்திகைப் பெருவிழா
ADDED :3119 days ago
பழநி: கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடிகோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு, மலைக்கோயிலில் 108 திருவிளக்குபூஜை நடந்தது. பழநி திருமுருக பக்த சபா சார்பில், திருஆவினன்குடிகோயிலில் குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் சனிபகவான், தட்சிணா மூர்த்திக்கு அபிஷேகம் செய்தனர். வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. பழநி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. மாலை 6மணிக்கு 108
திருவிளக்குபூஜையும், பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.