உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை பாகம்பிரியாள் கோயிலில் மே 8ல் தேரோட்டம்

திருவாடானை பாகம்பிரியாள் கோயிலில் மே 8ல் தேரோட்டம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்  தேரோட்டம் மே 8ல் நடக்கிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில்
உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30ல்  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவில் பாகம்பிரியாள் தாயார் அன்னம், ரிஷபம், குதிரை,
காமதேனு போன்ற பல வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 8 காலை 8:00 மணிக்கு  நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரியும் கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !