உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ பிரதிநிதிகள்

மீனாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ பிரதிநிதிகள்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ பிரதிநிதிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள தொன்மையான இந்து கோயில்களில் ஆகம விதிகள் மீறப்பட்டு வருவதாகவும், அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், யுனெஸ்கோ பிரதிநிதிகள் இந்து கோயில்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து யுனெஸ்கோ பிரதிநிதிகள் சிக்காஜெயின், தூர்வா, பகவான் சாரதி ஆகியோர் நேற்று மீனாட்சி அம்மன் கோயில் வந்தனர். பழைய திருக்கல்யாண மண்டபம், பொற்றாமரைக்குளம், சுவாமி சன்னதி, ஆயிரம் கால் மண்டபம், ஆடி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோரிடம் ஆலோசனை பெற்றனர். பின் நெல்லை புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !