ராமானுஜருக்கு தபால் தலை
ADDED :3416 days ago
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., ராமச்சந்திரன் அறிக்கை: ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து, 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் ராமானுஜர். அவரது ஆயிரமாவது அவதார பெருவிழா, மே, 1ல், ஸ்ரீபெரும்புதூரில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, என் தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, ராமானுஜருக்கு நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என, மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தினேன்.என் கோரிக்கையை ஏற்று, ராமானுஜருக்கு நினைவு தபால் தலை வெளியிட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.