உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பந்தியூர் லட்சுமி குபேரருக்கு சிறப்பு யாகம்

திருப்பந்தியூர் லட்சுமி குபேரருக்கு சிறப்பு யாகம்

திருப்பந்தியூர் : திருப்பந்தியூர், லட்சுமி குபேரருக்கு, அட்சய திருதியை முன்னிட்டு, இன்று, சிறப்பு யாகமும், திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூரில் உள்ளது லட்சுமி குபேரர் கோவில். இங்கு, அட்சய திருதியை முன்னிட்டு, சிறப்பு யாகமும், திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, இன்று, மாலை 3:00 மணிக்கு, புன்யாஹவாசனம், புருஷ சுக்தம், லட்சுமி சுக்தம் ஹோமம், பூர்ணாஹூதியும், மாலை 4:00 மணிக்கு மூலவர் லட்சுமி குபேரருக்கு திருமஞ்சனமும், மாலை 5:30 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனையும், அதை தொடர்ந்து, மகா தீபாராதனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !