திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மே 1ல் பிரம்மோற்சவம் துவக்கம்
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், மே, 1ம் தேதி துவங்கி, 10ம் தேதி நிறைவடைகிறது. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் வரும், மே, 1ம் தேதி, காலை, 6:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கு கிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில், காலை, மாலை, இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பெருமாள் வீதி வலம் வருவார்.
விழா நிகழ்ச்சி விபரம்
மே 1 காலை 6:00 மணி கொடியேற்றம் காலை 7:00 மணி தங்க சப்பரம் புறப்பாடு இரவு 8:00 மணி சிம்ம வாகனம்
மே 2 காலை 6:00 மணி ஹம்ச வாகனம் இரவு 7:00 மணி சூர்ய பிரபை
மே 3 காலை 4:00 மணி கருடசேவை கோபுர தரிசனம்
காலை 5:30 மணி புறப்பாடு இரவு 8:30 மணி ஹனுமந்த வாகனம்
மே 4 காலை 6:00 மணி சேஷ வாகனம் இரவு 7:30 மணி சந்திர பிரபை
மே 5 காமலை 4:00 மணி நாச்சியார் திருக்கோலம் இரவு 7:00 மணி யாளி வாகனம்
மே 6 காலை 5:00 மணி வேணுகோபாலன் திருக்கோலம்
காலை 6:30 மணி வெள்ளி சப்பரம் இரவு 7:00 யானை வாகனம்
மே 7 காலை 5:00 மணி திருத்தேருக்கு எழுந்தருளல் காலை 7:00 மணி தேர் புறப்பாடு இரவு 10:30 மணி கோவிலுக்கு எழுந்தருளல்
மே 8 காலை 10:00 மணி திருமஞ்சனம் இரவு 8:00 மணி குதிரை வாகனம்
மே 9 காலை 4:00 மணி ஆள் மேல் பல்லக்கு காலை 10:00 மணி தீர்த்தவாரி இரவு 10:00 மணி ரத்னாங்கி சேவை மே 10 காலை 9:00 மணி திருமஞ்சனம் நள்ளிரவு 12:00 மணித்வஜ அவரோஹணம்