முன்வினை பயனால் தான் வாழ்வில் துன்பம் உண்டாகிறதா?
ADDED :3290 days ago
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ் இலக்கியம். துன்பம் மட்டுமில்லாமல் இன்பத்திற்கும் முற்பிறவிச் செயலே காரணம். இதை உணர்ந்தவர்கள் விருப்பு, வெறுப்பின்றி செயல்படுவர். மனத்தூய்மை மிக்க இவர்களைப் பாவ, புண்ணியம் சேராது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வின் இறுதியில் கடவுளின் திருவடியைச் சென்றடைவர்.