உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோயில் உற்சவர் பல்லக்கில் ஏற்றப்பட்டு, கோயில் பிரகாரத்தில் உலா வந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் கொடிமரம் முன் உற்சவர் முன்னிலையில் நேற்று கொடியேற்றப்பட்டது. இன்று முதல் 10 நாள் விழா தொடர்ந்து நடைபெறும்.

மே 7-ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 8-ம்தேதி கொடியிறக்கம், தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் செந்தில்குமார், செயல் அலுவலர் அருள்செல்வன் மற்றும் தைப்பூச பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !