உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா

உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜரின் திருநட்சத்திர விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ ஆயிரம் கலசாபிஷகம் நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக‚ நேற்று‚ சுவாமிக்கு ஆயிரம் கலசாபிஷகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு‚ பரமபதவாசல் மண்டபத்தில்‚  புஷ்பவல்லி சமேத தேசகளீசபெருமாள்‚ ஸ்ரீமத் ராமானுஜருக்கு ஆயிரம் கலச திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரம்‚ தீபாராதனை வேத சாற்றுமறை நடந்தது. இரவு 8:00 மணிக்கு‚ ராமானுஜர் சேஷவாகனத்தில் வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில்‚ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !