உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை சித்திரை திருவிழா துவக்கம்: மே 7ல் திருக்கல்யாணம்

மானாமதுரை சித்திரை திருவிழா துவக்கம்: மே 7ல் திருக்கல்யாணம்

மானாமதுரை; மானாமதுரை சோமநாதர், ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் துவங்கியது. மே 7 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்திரை திருவிழா மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழா நேற்றுமுன்தினம் காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அம்மன், சுவாமி கற்பக விருட்சம் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினர். வீதி உலா நடந்தது.கோவில் முன் மண்டகப்படிதாரர் கலைநிகழச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணம் மே 7 காலை 11:00 மணிக்கு நடக்கிறது. ஏப்., 8 காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !